தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேஷனல் ஹெரால்டு வழக்கில் கர்நாடக துணை முதல்வருக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

பெங்களூரு: நேஷனல் ஹெரால்டு வழக்கில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரிடம் விவரங்கள் கேட்டு டெல்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, ‘யங் இந்தியன்’ நிறுவனம் மூலம் சட்டவிரோதமாகக் கைப்பற்றியதாகப் புகார் எழுந்தது. அமலாக்கத்துறை அளித்த இந்தப் புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மீது கடந்த அக்டோபர் மாதம் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

Advertisement

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாக மாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாகக் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், ‘யங் இந்தியன் நிறுவனத்திற்குப் பரிமாற்றம் செய்யப்பட்ட நிதி, அதற்கான ஆதாரம் மற்றும் வருமான வரிக் கணக்கு விவரங்களுடன் வரும் 19ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான தொடர்பு மற்றும் வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்களையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement