தேசிய பத்திரிகை தினம் முதல்வர் வாழ்த்து
சென்னை: தேசிய பத்திரிக்கை தினத்தையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக பத்திரிகைகள் இருக்கவேண்டும். ஒன்றிய பாஜ அரசின் ஊழல்களை தைரியமாக வெளிப்படுத்தும் ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் பாராட்டுக்கள்.
Advertisement
ஒன்றிய அரசின் அடக்குமுறைகளுக்கு வளைந்துகொடுக்காமல் அதன் ஊழல்களை பத்திரிக்கைகள் எடுத்துச்சொல்ல வேண்டும். ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்துக்கு அடிபணிய மறுத்து அதன் தோல்விகளை துணிச்சலுடன் வெளிப்படுத்துகின்றன பத்திரிக்கைகள். உண்மையை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு பத்திரிக்கையாளரையும் பாராட்டுகிறேன். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement