தேசிய தலைவர் படத்துக்கு எதிரான வழக்கு: தணிக்கை வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை
மதுரை: தேசிய தலைவர் படத்துக்கு எதிரான வழக்கில் தணிக்கை வாரியம், இயக்குநர், தயாரிப்பாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. தேசிய தலைவர் படத்தை திரையிடுவதற்கு முன் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், தேசிய தலைவர் படத்தை திரையிட்டு விதிகளுக்கு உட்பட்டு ஆம். ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. தேசிய தலைவர் படம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குடன் தற்போதைய வழக்கையும் சேர்த்து தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை அக்.28க்கு ஒத்திவைத்தது.
Advertisement
Advertisement