தேசிய நெடுஞ்சாலைத் துறையில் துணை மேலாளர்
தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு துறையில் காலியாக உள்ள துணை மேலாளர் (டெக்னிக்கல்) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை மேலாளர் (டெக்னிக்கல் கேடர்): 34 இடங்கள் (பொது-16, எஸ்சி-4, எஸ்டி-2, ஒபிசி-9, பொருளாதார பிற்பட்டோர்-3). வயது: 34க்குள். சம்பளம்: ரூ.50,000- 1,60,000.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., தேர்ச்சியுடன் 2023/2024/2025 ஆகிய ஆண்டுகளில் நடந்த கேட் தேர்வுகள் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். www.nhidcl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.11.2025.