தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் காலமானார்
சென்னை: தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை முன்னாள் இயக்குநரான நடன.காசிநாதன் காலமானார். வரலாறு, கல்வெட்டு ஆய்வு, நாணயவியல், செப்பேடுகள் என ஆய்வு மேற்கொண்டவர் நடன.காசிநாதன். தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் நடன.காசிநாதன். தன்னுடைய 3,000க்கும் மேற்பட்ட ஆவணங்களை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு வழங்கினார். மனோரா, முத்தரையர், களப்பிரர், கல்வெட்டின் கதை, தமிழர் தெய்வங்கள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். தொல்லியல் ஆய்வுகள் குறித்து ஆங்கிலத்திலும் பல நூல்களை நடன.காசிநாதன் எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement