நம்பி கோயிலுக்கு பயணிகள் செல்ல தடை: மேகமலை அருவியில் 8வது நாளாக குளிக்க தடை
நெல்லை: நெல்லை மாவட்டம் திருக்கருங்குடி அருகே உள்ள நம்பி கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நம்பி கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement