நாமக்கல்லில் விஜய் நாளை பிரசாரம்
நாமக்கல்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாமக்கல்லில் நாளை பிரசாரம் செய்கிறார். நாமக்கல்- சேலம் ரோடு கேஎஸ் தியேட்டர் மெயின்ரோடு பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
Advertisement
இதையடுத்து நாளை காலை 11 மணிக்கு விஜய் பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் திருச்சியில் இருந்து கார் மூலம் நாமக்கல் வருகிறார். நாமக்கல் நகரில் பிரசாரம் செய்துவிட்டு பின்னர் முதலைப்பட்டி பைபாஸ் சாலை வழியாக நடிகர் விஜய் கரூர் செல்கிறார்.
Advertisement