நாமக்கல் அருகே அரசு பள்ளியில் நெகிழ்ச்சி கடிதம் எழுதிய மாணவருடன் கலெக்டர் கலந்துரையாடல்: போட்டி தேர்வை தமிழில் எழுத அறிவுரை
மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப்போல, உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் என கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, எருமப்பட்டி பகுதிகளில் ஆய்வுப்பணிக்கு சென்ற கலெக்டர் துர்கா மூர்த்தி, மாணவர் விஜய் படிக்கும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு அவர் தனக்கு கடிதம் எழுதிய மாணவர் விஜய் மற்றும் மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார்.
அப்போது, கலெக்டர் துர்கா மூர்த்தி, மாணவர் தனக்கு எழுதிய கடிதத்தை படித்து காண்பித்ததுடன், ‘மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப்போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்,’ என வரியை வாசித்து நெகிழ்ந்தார். அப்போது, போட்டி தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள் என கலெக்டரிடம் மாணவர் விஜய் கேட்டார். இதற்கு கலெக்டர் ஆங்கிலத்தில் எழுதியதாக கூறினார்.
ஏன் தமிழில் எழுத முடியாதா? என மாணவர் விஜய் கேட்டார். இதற்கு கலெக்டர் தாராளமாக தமிழில், நமது தாய் மொழியில் எழுதலாம். நிறைய இந்திய ஆட்சியர் (கலெக்டர்) பணியில் தேர்வு பெற்றவர்கள், தாய் மொழியில் எழுதியுள்ளார்கள். அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து கலெக்டர் துர்கா மூர்த்தி, மாணவர்களுடன் கலந்துரையாடி, நீங்கள் விடா முயற்சியுடன் பயின்று, பல்வேறு சாதனையாளர்களாக வர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.