நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை; 86 லட்சம் பறிமுதல்
05:49 PM Apr 13, 2024 IST
Share
நாமக்கல்: நாமக்கல் பரமத்தி சாலை ஈபி காலனியில் உள்ள தொழிலதிபர் செல்லப்பன் என்பவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானத்துறை அதிகாரிகள் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 86 லட்சம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.