நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.10 ஆக நிர்ணயம்
Advertisement
நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்துள்ளனர். கொள்முதல் விலை உயர்வு காரணமாக முட்டை விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. ரூ.6.5ஆக இருந்ததே புதிய உச்சமாக நீடித்த நிலையில் முட்டை கொள்முதல் விலை தற்போது ரூ.6.10ஆக அதிகரித்துள்ளது. முட்டை விற்பனை மற்றும் நுகர்வு அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்து வருவதாக கோழிப்பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 55 ஆண்டு கால தமிழ்நாடு கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.10 என்பது இதுவே முதல்முறை
Advertisement