நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் புதிய பொறுப்பு
சென்னை: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த குமரகுருவுக்கு வழக்கறிஞர் பிரிவு தலைவர் பதவி வழங்கப்படுகிறது. அதேபோல், சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராமனக்கு தொழில்துறை வல்லுநர்கள் பிரிவு, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு மருத்துவப் பிரிவு, தென்சென்னையைச் சேர்ந்த கர்னல் ராமனுக்கு முன்னாள் படைவீரர்கள் பிரிவு, தென்சென்னையைச் சேர்ந்த பெப்சி சிவக்குமாருக்கு, கலை மற்றும் கலாச்சார பிரிவு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சூரிய நாராயணனுக்கு அரசு தொடர்பு மற்றும் மத்திய நலத்திட்டங்கள் பிரிவு, சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு தேசிய மொழிகள் பிரிவு, செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கந்தவேலுக்கு விருந்தோம்பல் பிரிவு, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதருக்கு(ஷெல்வி) ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு, நெல்லை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் பாலாஜிக்கு விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டு பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜூன மூர்த்தி, கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீதா ரங்கராஜன் ஆகிய 2 பேருக்கு தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு, சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரத்திற்கு அயலக தமிழர் பிரிவு, வடசென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு அமைப்புசாரா தொழிற்பிரிவு, சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காயத்திர சுரேசுக்கு பொருளாதார பிரிவு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் ராஜாவுக்கு வர்த்தகர் பிரிவு உட்பட 25 அணிகளுக்கு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.