நாகர்கோவிலில் 125 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
சென்னை: தீபாவளி முடிந்து பணியிடங்களுக்கு செல்வோரின் வசதிக்காக நாகர்கோவிலில் 125 சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு 25, கோவைக்கு 25, மதுரைக்கு 40, திருச்சி, தஞ்சை, சேலத்துக்கு தலா 10 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் மேலும் 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement