நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவு மணிப்பூர் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு
புதுடெல்லி: மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு, நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். இதையடுத்து நாகாலாந்து ஆளுநர் பொறுப்பு மணிப்பூர் ஆளுநர் அஜய்குமார் பல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,’நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் மறைவைத் தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பாக நாகாலாந்து ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது.