நாகை மாவட்டம் சங்கமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருப்பு: நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததாக விவசாயிகள் வேதனை
நாகை: நாகை மாவட்டம் சங்கமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நனைந்த நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள் கொள்முதல் செய்ய அதிகாரிகள் தொடர்ந்து தாமதம் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆதாவது வடகிழக்கு பருவமழை என்னைக்கு தமிழ்நாட்டில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதுனால் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், நாகூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்த சூழலில், பொதுமக்களுக்கு மழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தினாலும் விவசாயிகள் நெல் அறுவடை முடிஞ்சு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கின்றனர். குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 80,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியானது செய்யப்பட்டிருந்தது. எந்த வருடமும் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான அறுவடை மகசூல் கிடைத்த நிலையில், விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு வார காலமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய 120 நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், அவங்களுடைய நெல் கொள்முதல் செய்வதற்காக காத்திருக்கின்றனர்.
குறிப்பாக லாரி பற்றாக்குறை இருப்பதினால் ஏராளமான நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் இரவு, பகலுமாக காத்திருக்கக்கூடிய நிலை இருந்து வருகிறது. இதனால் மழை விட்டு விட்டு பெய்வதால் அங்கு இருக்கக்கூடிய நெல்மூட்டைகளை தர்ப்பை கொண்டு பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் நிர்வாகிகள் உடனடியாக லாரிகள் அதிகளவில் அனுப்ப விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்ய சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் வந்து பார்க்காததால் விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். சங்கமங்கலம் பகுதிகளில் மழை நீரானது தேங்கியிருப்பதுனால் நெல்மூட்டைகள் நனைந்தோ, நெல்மணிகள் முளைத்தோ காணப்படுகிறது. மழை அதிகரிக்கும் முன்பாகவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.