நாகை மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டிய கனமழை: இன்று நடைபெற இருந்த ராணுவ ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வு நிறுத்தம்
நாகப்பட்டினம்: நாகையில் நள்ளிரவில் பெய்த மழையால் இன்று நடைபெற இருந்த ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது. அக்னிவேர் திட்டத்தின் மூலமாக நான்கு ஆண்டுக்கு பணிபுரியக்கூடிய அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகமானது நடைபெற்று வந்தது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த கிட்டத்தட்ட அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை என 17 மாவட்டத்தில் சேர்ந்த 6,000 பேர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
அப்படி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 18ஆம் தேதி முதல் அதாவது நேற்றியிலிருந்து வருகின்ற 26ஆம் தேதி வரை உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளுக்கும் இரண்டு மாவட்டம் அல்லது மூன்று மாவட்டத்தில் சேர்ந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் கிட்டதட்ட 400 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்று தினம் வந்த இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கானோர் மாவட்ட விளையாட்டு அரங்கில் காத்திருந்தனர்.
நாகப்பட்டினத்தில் நேற்று விடிய விடிய மழை பெய்ததால் நள்ளிரவில் ஒரு மணிக்கு தொடங்க கூடிய உடற்தேர்வு தகுதி தேர்வானது நிறுத்தப்பட்டது. மைதான முழுவதும் மழை நீர் தேங்கி இருப்பதால் ஓடுதல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அந்த மைதானத்தில் சரிசெய்யும் பணியை அங்கு இருக்கக்கூடிய பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டு வருகிறார்கள். இதேபோல வருகின்ற 26ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறும் .
வருகின்ற 20, 21, 22 மற்றும் 26ஆம் தேதி வரை ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வானது நடைபெறும். அவர்கள் தேர்வு செய்யப்படுபவர்கள் விமானபடை, கடற்படை உள்ளிட்ட மூன்று துறைகளில் பணியாற்றுவார்கள் என்று குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இன்று மாலை உடற்தகுதி தேர்வு நடைபெறும் எனவும் ராணுவ தரப்பில் இருக்கக்கூடிய அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டன.