அய்சால்: மியான்மரில் சமீபத்தில் சின் தேசிய ராணுவத்தின் ஆதரவுடன் சின் தேசிய பாதுகாப்பு படை மற்றும் சின்லாந்து பாதுகாப்பு படை இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து மியான்மரில் சின் மாநிலத்தில் இருந்து 4500க்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை மாநிலமான மிசோரமிற்குள் தஞ்சம் அடைந்தனர். இவர்கள் சம்பாய் மாவட்டத்தில் உள்ள ஜோகாவ்தர், சைகும்பை மற்றும் வைபாய் ஆகிய எல்லை கிராமங்களில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் அகதிகள் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர். கடந்த 7ம் தேதி முதல் இவர்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பி வருகின்றனர். சின் பிரிவுகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து அகதிகள் திரும்பி வருவது வேகமடைந்துள்ளது.