முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அடக்குமுறைச் சட்டங்களின் ஆதிக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்டு, நேதாஜி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக நாட்டு விடுதலைக்குப் போராடிய தீரர் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தியில் அவரது திருவுருவச் சிலைக்கும், பசும்பொன் நினைவிடத்திலும் எனது மரியாதையைச் செலுத்தினேன்.
மேலும் மதுரை தெப்பகுளத்தில் மானம் காத்த மருதிருவர் திருவுருவச் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து வணங்கினேன். பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்ட மனநிறைவுடன் சென்னைக்குத் திரும்புகிறேன்.1974ல் பசும்பொன் தேவர் திருமகனாருக்கு மணிமண்டபம் கட்டிக் கொடுத்தவர் கலைஞர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை ஆண்டாள்புரம் பாலத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டியவர் கலைஞர். பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்படும். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். முத்துராமலிங்க தேவர் பெயரில் கலைஞர் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். முத்துராமலிங்கத் தேவர் சமூக உயர்வுக்காகவும், சமூக நல்லிணக்கத்துக்காகவும் பாடுபட்டவர்.
2007ல் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி நினைவிடத்தை புதுப்பித்தவர் கலைஞர். முத்துராமலிங்கத் தேவர் பெயரில் 3 இடங்களில் அரசு கல்லூரிகள் அமைக்கப்பட்டன. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரில் அறக்கட்டளை உருவாக்கியவர் கலைஞர். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கை அமைத்தவர் கலைஞர். தேவர் ஜெயந்தியில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரூ.1.55 கோடியில் தேவர் அரங்கம் திறக்கப்பட்டுள்ளது