தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் கடற்கரை முகத்துவாரத்தில் மெகா பனை விதைப்பு

*சாரண படை மாணவர்கள் நட்டனர்

Advertisement

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் தெற்குகாடு கடற்கரை முகத்துவாரத்தில் சாரண படை மாணவர்கள் பனை விதை நட்டனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் தெற்குகாடு கடற்கரை முகத்துவாரத்தில் மன்னார்குடி கல்வி மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் தேசிய தலைமையகத்தின் அறிவுறுத்தலின்படியும் மாநில தலைமையகத்தின் வழிகாட்டுதலின்படியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சௌந்தரராஜன், மாவட்ட முதன்மை ஆணையரும் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலருமான ராஜேஸ்வரி, மாவட்ட தலைவரும் மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலருமான சாவித்திரி ஆகியோரின் ஆலோசனையுடனும் உலக கடற்கரை தூய்மை வாரத்தை முன்னிட்டு தூய்மை பணியும் 3632 பனை விதைகள் நடும் பணியும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். சாரணர் இயக்க மாவட்ட பொருளாளர் சங்கர், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம், பாலம் தொண்டு நிறுவன இயக்குனர் செந்தில்குமார், நூற்றாண்டு சங்க தலைவர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இத்தகைய பலன் தரக்கூடிய பனை மரங்களை தமிழ்நாடு முழுவதும் சாலைகள், வயல், வாய்க்கால், ஆறு, ஏரிக்கரைகள், கடற்கரை ஓரங்களில் சாரணர் இயக்க மாணவர்களும் பனை விதைகளை நட்டு சுற்று சு ழலை பாதுகாக்க தங்களுடைய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து பள்ளி சாரண இயக்க மாணவர்களும் ஏதாவது ஒரு வகையில் பனைமர விதைகளை நட்டு தமிழ்நாடு மாநில மரமான பனைமரத்தை பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டும் என்றார்.

இதில் திரி சாரணர் படை தலைவர் பழனிவேல், தில்லைவிளாகம் ஊராட்சி செயலாளர் முருகானந்தம், சங்க செயலாளர் வீரமணி, பொருளாளர் மோகன், முன்னாள் தலைவர்கள் கார்த்திகேயன், தங்கமணி முன்னாள் பொருளாளர் நவீன், சுகாதார ஊக்குநர் உமாராணி எடமேலையூர், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, இடையூர் அரசு பள்ளிகளை சேர்ந்த திரி சாரணர்களும் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி திரி சாரணர்களுமாக மொத்தம் 70 பேர் கலந்து கொண்டார்கள். திரி சாரணர் படை தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement