தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இசைத்துறையில் சாதிக்கும் இளைஞர்களுக்கு இளையராஜா பெயரில் விருது: சென்னையில் நடந்த பொன் விழா ஆண்டு பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இசையில் சாதிக்கும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் என்று சென்னையில் நடந்த இளையராஜாவின் பொன்விழா ஆண்டு பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெற செய்தவர் இசைஞானி இளையராஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 1975ம் ஆண்டு துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

Advertisement

திரையிசை மட்டுமின்றி பல்வேறு தனியிசை படைப்புகளையும் வெளியிட்டுள்ளார் இளையராஜா. முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை சிகரத்தையும் தொட்டு சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் தமிழர் மட்டுமல்ல, இளையராஜா முதல் இந்தியரும் ஆவார். ஆசிய நாடுகளைச் சேர்ந்த எவரும் இச்சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இளையராஜா கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை பாராட்டி, அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், “இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசை பயணத்தை தமிழக அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்” என்று அறிவித்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா நேற்று மாலை நடந்தது. \\”சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50\\” என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கங்கை அமரன் போன்ற இளையராஜா குடும்பத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

இளையராஜாவின் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு பாராட்டு விழா துவங்கியது. ‘அமுதே தமிழே...’ என்ற பாடல் முதலில் பாடப்பட்டது. இந்த பாடலை இளையராஜாவும் அவரது குழுவினரும் பாடினர். தொடர்ந்து ‘‘ராக்கம்மா கைய தட்டு..., செந்தூரப்பூவே..., அந்தி மழை பொழிகிறது..., சின்னத்தாய் அவள்...’’ உள்ளிட்ட பல பாடல்கள் மேடையில் நேரலையில் பாடி, இசையமைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் இளையராஜாவின் இன்னிசை மழையை ரசித்தனர். விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவுக்கு நினைவு பரிசு வழங்கி தலைமையுரை ஆற்றினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ராஜா ராஜாதி ராஜா இந்த ராஜா. நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா, இசை எண்ணும் தேனை எப்போதும் தரும் தேனிக்காரரை பாராட்ட, புகழ அனைவரும் கூடியிருக்கிறோம். இசைஞானி கலைத்தாய்க்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவர். அதனால் தான் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழாவை, அவரை கொண்டாடும் விழாவை நடத்திக் கொண்டு இருக்கிறோம். பாராட்டும், புகழும் ராஜாவுக்கு புதுசா, இசைஞானியை பாராட்டுவதால் நாம் தான் பெருமையடைகிறோம். அவர் திரையுலக பயணத்தை தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. நம்முடைய இதயங்களை ஆளத் தொடங்கி அரை நூற்றாண்டுகள் ஆகிறது. திரைப்பயணத்தில் பொன்விழா கண்டுள்ள சிம்பொனி சிகரம் தொட்ட தோழர், தமிழருக்கு உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்டு திறமையும், உழைப்பும் இருந்தால் எந்த உயரங்களையும் அடையாளம் என்று எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த அரை நூற்றாண்டு காலத்தில் ராஜாவோடு பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. ராஜாவோடு பாடல்களை மனதில் ஏற்றி தங்கள் இன்ப, துன்பங்களை பொருத்திப் பார்க்காத மனிதர்களே இருக்க முடியாது. இளையராஜா இசை தாயாக தாலாட்டுகிறது. காதலின் உணர்வுகளை போற்றுகிறது, வெற்றிப் பயணத்திற்கு ஊக்கம் அளிக்கிறது. வலிகளை ஆற்றுகிறது. இவர் இளையராஜா மட்டுமல்ல, இணையற்ற ராஜா, ராஜா இருந்தால் அவருக்கு நாடு இருக்கும், மக்கள் இருப்பார்கள், எல்லைகள் இருக்கும். ஆனால் இந்த ராஜா மொழிகள், நாடுகள், எல்லைகளை கடந்தவர் எல்லா மக்களுக்குமானவர். திரை இசையை கடந்த இளையராஜா இசை அவரின் திறனை, வீச்சை, ஆற்றல், ஆழத்தை, உயரத்தை எடுத்துச் சொல்லும்.

இசைஞானி இளையராஜா பற்றி சமூக வலைதளத்தில் ஒருவர் எழுதிய சிலவரிகளை கூறுகிறேன். இளையராஜா மட்டும் இசை அமைத்திருந்தால் திருக்குறள், நற்றிணை, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், சிலப்பதிகாரம் எங்களுக்கு மனப்பாடம் ஆகி இருக்கும் என்று எழுதியிருந்தார். நானும் இதையே தான் தமிழ் ஆர்வலராக உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். சங்க தமிழுக்கு, தமிழ் இலக்கியங்களுக்கு இசை அமைத்து சில ஆல்பங்கள் வெளியிட வேண்டும். எப்போதும் முதல்வரிடம் தான் கோரிக்கை வைப்பார்கள், ஆனால் முதல்வராக தமிழ் மக்கள், தமிழர்கள் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இசை ஆளுமையும், தமிழ் புலமையும் கொண்ட நீங்கள் இந்த கடமையை செய்ய வேண்டும்.

ஏற்கனவே தமிழர்கள் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் நீங்கள், உங்கள் இசை மூலமாக தமிழ் சுவை அடுத்த தலைமுறையினருக்கு பரிமாறப்பட வேண்டும். ராஜா கைய வச்சா அது ராங்கா போனது இல்லை, அந்த நம்பிக்கையுடன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். இசையால் நம்முடைய ெநஞ்சங்களை ஆளும் இளையராஜாவுக்கு எத்தனையோ புகழ்மகுடங்கள், பாராட்டுகள், பத்மபூஷண், பத்மவிபூஷன் என்று எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும் அவரது ஆற்றலுக்கு பொருந்தி என்றைக்கும் அவருடன் பயணிக்கின்ற பட்டம் தான் கலைஞர் வழங்கிய இசைஞானி பட்டம், அது பட்டமா? அது பெயராகவே நிலைத்துவிட்டது. இசைஞானி உயரத்தை பார்த்து பெருமைப்பட்ட கலைஞர், இசைஞானி வழங்கிய மரியாதை யாரும், யாருக்கும் தராத மரியாதை. வரலாற்றில் எத்தனையோ மாநிலங்களில் ஒரே பிறந்த நாளை கொண்டாட கூடியவர்களாக இருப்பார்கள்.

யாரானாலும் இன்னொருவருக்காக பிறந்த நாளை மாற்றியது கிடையாது. ஆனால் இசைஞானி, கலைஞருக்காக தன்னுடைய பிறந்த நாளை ஜூன் 2ம் தேதிக்கு மாற்றிக் கொண்டார். அந்த வகையில் உள்ளத்திலும் ராஜாவாக உயர்ந்திருக்கிறார், தமிழாலும் இசையாலும் உயர்ந்து கலைஞருக்கும், இசைஞானிக்கும் இருந்தது நட்பு. என்னுடைய மகள் செந்தாமரை நாட்டிய அரங்கற்றத்தில் பங்கேற்று வாழ்த்தினார். அந்த நட்போடு அவர் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் பண்ணப்போகிறார் என்றதும் முதல் ஆளாக அவர் வீட்டிற்கு சென்று பாராட்டுகள், வாழ்த்துகளை கூறினேன். அவரும் சிம்பொனி சாதனை நிறைவேற்றிய வெற்றிக் கழிப்போடு என் வீட்டிற்கு வந்து என்னை பார்த்தார். இந்த அன்புக்கு கட்டுப்பட்டவன், கடமைப்பட்டவன், அந்த அன்போடு சொல்கிறேன், இது இசைஞானி இளையராஜாவுக்காக நடத்தக்கூடிய விழா அல்ல, உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கும் விழா ஆகும்.

இசைத்துறையில் ஆர்வத்துடன் சிறந்த இசையை படைக்கிற இசைகலைஞர்களை ஊக்கும் விக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும். இந்த அரங்கத்தில், இசைஞானியுடைய இசையைக் கேட்டு மயங்கியிருக்கும் எல்லோருடைய உணர்வுகளை, அவருடைய பாடல் வரிகளிலேயே சொல்லவேண்டும் என்றால், “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே” இசைஞானி அவர்களே... உங்கள் பயணம் இன்னும் பல்லாண்டுகாலம் தொடர வேண்டும், தொடர வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் வாழ்த்துகிறேன். வாழ்க இளையராஜா, வாழ்க இசைராஜா. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நடிகர் கமல்ஹாசன் எம்.பி., நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக இசைஞானி இளையராஜா எம்.பி., ஏற்புரை நிகழ்த்தினார். இதில், அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், திரைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ்த் திரையுலக முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி கூறினார்.

* பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் சார்பாக மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள ராஜாவின் ரசிகர்கள் சார்பில் இந்த விழாவில் ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நிச்சயம் இது நிறைவேறும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

Advertisement