இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக் குறைவால் காலமானார்!
சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக் குறைவால் காலமானார். தேவாவின் சகோதரர்கள் சபேஷ் - முரளி இருவரும் இணைந்து பல்வேறு திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் சபேஷ் இருந்தார். சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷ் உடல் வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement