தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முருங்கை...காயிலும் லாபம்! தேனிலும் லாபம்!

தூத்துக்குடி மாவட்டம் அணத்தலை கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் முருங்கை சாகுபடியில் ஈடுபடுவதோடு, முருங்கைக்காய்களை துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்து லாபம் பார்த்து வருகிறார். மேலும் முருங்கை மரங்களின் அருகில் தேன் பெட்டிகள் வைத்து தேன் சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது முருங்கை சாகுபடி விவரங்கள் குறித்து கடந்த இதழில் கண்டோம். ஏற்றுமதி மற்றும் தேன் சேகரிப்பு விவரங்கள் குறித்து இந்த இதழில் காணலாம்.`` ரெண்டரை அடியிலர்ந்து மூணு அடி இருக்குற காயைத்தான் எக்ஸ்போர்ட் பண்ண முடியும். இப்போ துபாய், சிங்கப்பூருக்கு அனுப்பறோம். நாம் ஏஜெண்ட்டுக்கு காய்களை நேரடியா குடுப்போம். குறஞ்சது 500 கிலோ காயை ஒரே டைம்ல குடுக்கணும். மருந்தடிச்சி 10 நாள் ஆன காயைத்தான் கேப்பாங்க. ஒரு கிலோவுக்கு 7 காய் இருக்கும். ஒரு கிலோ 15லர்ந்து 20 ரூபாய்க்கு போகும். காய் வைக்கிற பெட்டியை ஏஜென்டே குடுத்துடுவாங்க. நாம அதுல அடுக்கி வச்சிடணும். காயையெல்லாம் அவங்களே வந்து எடுத்துட்டு போயிடுவாங்க. காயை வண்டியில ஏத்துன ஒடனே காசு குடுத்துடுவாங்க. மாசத்துக்கு 2 டன் வரைக்கும் குடுக்குறோம். எல்லா மாவட்டத்துக்காரங்களும் உள்ளூர் ஏஜெண்ட் வழியா கரும்பு முருங்கை, நோபிள், நாசிக் என எல்லா வகையையும் எக்ஸ்போர்ட் பண்ணலாம். நாம மரத்துலர்ந்து கீரை பறிக்கறதில்ல. கீரை பறிச்சா காய் விளைச்சல் பாதிக்கப்படும். கடந்த 5 ஆண்டுகள்ல, 3 ஆண்டுகள் லாபகரமா இருக்கு. ரெண்டு வருஷம் நட்டம்னு சொல்ல முடியாது, அடியும் புடியுமா (வரவுக்கும் செலவுக்கும் சரியா) இருந்தது” என்றார் உயரத்தில் இருக்கும் முருங்கைக்காய்களை கம்பு (சுரட்டுக்கோல்) வைத்துப் பறித்து உள்ளூர் சந்தையில் விற்கிறார். உள்ளூர் சந்தையில் கிலோ 7 ருபாய் முதல் 15 ரூபாய் வரை விலை கிடைப்பதாகக் கூறும் ராஜகோபால், தனது தேன் சேகரிப்பு குறித்து பேச ஆரம்பித்தார்.

Advertisement

“முருங்கைத் தோட்டத்துக்கு பக்கத்துலயே தேன் பெட்டி வச்சி தேன் உற்பத்தி பண்றதால அதுலயும் நல்ல வருமானம் கிடைக்குது. முருங்கைல மருந்தடிக்கறதால தோட்டத்துக்கு உள்ளயே நேரடியா வைக்க முடியாது. பக்கத்துல இருக்குற தென்னந்தோப்புல பெட்டிய வைக்கறோம். முருங்கை பூ பூக்குற சீசன்ல, அந்தத் தேனீல்லாம் முருங்கைப் பூவுல இருந்து தேன் எடுக்கும். மத்த தேன்லாம் ப்ரவுன் கலர்லயும், கருப்பு கலர்லயும் இருக்கும். ஆனா, முருங்கைத்தேன் மட்டும் நல்ல வெள்ளையா, கோல்டன் ஒயிட்ல மின்னும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்தத் தேனை ஒரு கிலோ 600 ரூபாய்க்கு குடுக்கறோம். குரியர் சார்ஜ்ஜோட சேர்த்து 700 ரூபா ஆகுது. முருங்கை பூக்கும் ஏப்ரல்ல இருந்து நவம்பர் வரைக்கும் முருங்கைத்தேன் எடுப்போம். டிசம்பர்லர்ந்து மார்ச் வரைக்கும் வேற பூ பூக்குற எடத்துக்கு மாத்தி வழக்கமான தேன் எடுப்போம்” என்றார். முதலீடு மற்றும் செலவு பற்றிக் கேட்டபோது “மஹோகனி மரத்துல பண்ண ஒரு பெட்டிக்கு 3000 ரூபாய் ஆகும். ஒழுங்கா பராமரிச்சா ஒரு பெட்டி 10 வருஷத்துக்கு இருக்கும். மொதல்ல 10 பெட்டி வாங்குனோம். நாலு வருஷத்துல அத 300 பெட்டியா ஆக்கினோம். ஏக்கருக்கு 20 பெட்டி வைக்கலாம். அடுத்தவங்க தோட்டத்துலயும் தேன்பெட்டி வைக்கறோம். தேன் பெட்டி வைக்கறதால முருங்கையோட விளைச்சல் அதிகமாவுதுன்றதால இத வேற தோட்டத்துல அனுமதிக்கறாங்க. மாசாமாசம் ஒன்னாந்தேதி தேன் எடுப்போம். 10 ஆட்களை வச்சி தேன் எடுத்தோம்னா, 3 நாள்ல தேனை எடுத்துடுவோம். ஒரு பெட்டிக்கு ஒரு கிலோல இருந்து ஒன்னறை கிலோ வரைக்கும் தேன் கிடைக்கும். தேன் எடுக்கும்போது பெட்டிக்கு ஸ்மோக்கர் வச்சி தேங்காநாரை வச்சி புகை போட்டுட்டு தேன் எடுப்போம்.

30 லிட்டர் கேன்ல தேன் எடுத்துட்டு, அதை எவர்சில்வர் பாத்திரத்துக்கு மாத்தி வச்சிப்போம். எங்க யூட்யூப் வீடியோக்களை பார்த்து மக்கள் நேரடியா வாங்கிக்கறாங்க. உள்ளூர்ல மளிகைக்கடையில குடுக்கறோம். 10 கிலோ கேன்ல வாங்கிப்பாங்க, அவங்க லூஸ்ல வித்துக்கறாங்க. சென்னை, கோவைலருந்துலாம் கூட வாங்கறாங்க. பேமன்ட் அனுப்பி விட்டப்புறம்தான் கூரியர் புக் பண்றோம். தேன் எடுத்த ஒரே வாரத்துல வித்துடும். முருங்கைக்காய்ல செலவெல்லாம் போக ஏக்கருக்கு வருசத்துக்கு அம்பதாயிரம் ரூபாய் கிடைக்கும். முருங்கைத்தேன்ல ஏக்கருக்கு 20 பெட்டி வச்சோம்னா ஆள்கூலி செலவெல்லாம் போக வருசத்துக்கு இருபதாயிரம் ரூபாய் நிக்கும்” என மகிழ்ச்சியாக கூறினார்.

தொடர்புக்கு:

ஆ.ராஜகோபால்: 93842 14456.

Advertisement

Related News