தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முறுக்கு மீதமாகி விட்டதா? கவலை வேண்டாம்!

தீபாவளிக்குப் பிறகு எது இருக்கிறதோ இல்லையோ, முறுக்கு வீடுகளில் நிறைய இருக்கும். ரசம் முறுக்கு, சாம்பார் சாதம் முறுக்கு, புளிக்குழம்பு முறுக்கு என முறுக்குக்கு எண்டே இல்லாமல் போகும். அதற்குதான் மீதமான முறுக்கை (Murukku) கொண்டு வெறும் ஸ்நாக் ஆக சாப்பிடாமல், சில புதுமையான ரெசிபிகள் செய்து பார்க்கலாம்.

Advertisement

1. முறுக்கு மசாலா மிக்ஸ்

* முறுக்கை சிறிது நொறுக்கி ஒரு கிண்ணத்தில் போடுங்கள்.

*அதில் நெய்யில் வறுத்த காஜு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.

*ஸ்பைசி டீ டைம் மிக்ஸ் ரெடி!

2. முறுக்கு சாட்

*முறுக்கை சிறிய துண்டுகளாக நொறுக்கவும்.

*அதில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, சாட் மசாலா சேர்த்து கலக்கவும்.

*மேலே தயிர், சிறிது புளிச்சாறு ஊற்றி பரிமாறவும்.

*முறுக்கு பேல் பூரி ஸ்டைல் சாட் தயார்!

3. முறுக்கு கட்லெட்

*நொறுக்கிய முறுக்குடன் மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து பந்து போல் உருட்டவும்.

*கோதுமை மாவில் மூழ்க வைத்து பொன்னிறமாக வறுக்கவும்.

*முறுக்கின் மொறு மொறு டெக்ஸ்சர் கட்லெட்டில் க்ரஞ்ச் கொடுக்கும்!

4. முறுக்கு காரக் குழம்பு

*முறுக்கை சிறிய துண்டுகளாக உடைத்து, மோர் குழம்பு அல்லது கார சாம்பாரில் போட்டு வேக விடவும்.

*அது முறுக்கை மெலிதாகவும், சுவையாகவும் மாற்றும்.

* இது குழம்பை மேற்கொண்டு சுவையாக மாற்றும்.

5. முறுக்கு பௌல் (Murukku Bowl)

*முறுக்கை மைக்ரோவேவில் சில நிமிடம் சூடாக்கி, ஒரு பௌலில் வைத்துக்கொள்ளவும்

*அதன் உள்ளே பாசிப்பருப்பு சாலட் அல்லது சுண்டல் நிரப்பவும்.

*இது பார்க்கவும் சாப்பிடவும் சிறந்த உணவு!

6. சாக்லேட் முறுக்கு க்ரஞ்ச்

* உருக்கிய டார்க் சாக்லேட்டில் நொறுக்கிய முறுக்கை கலந்து சிறிய உருண்டைகளாக போட்டு உறையவைக்கவும்.

*இது கேட்க சற்றே வித்தியாசமாக இருந்தாலும் மொறுமொறு சாக்லேட் க்ரஞ்ச் ஸ்னாக்ஸ் ஆக பரிமாறலாம்.

7. முறுக்கு உப்புமா

* சாதாரண உப்புமா போல சமைக்கும் போது ரவை சேர்க்காமல், நொறுக்கிய முறுக்கை சேர்த்து கிளறவும்.

* மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து மசாலா உப்புமா போல செய்யலாம்.

* உப்புமா என்றாலே சிதறி ஓடும் வீட்டார் இதை விரும்பி சாப்பிடுவர்!

- கவின்

Advertisement

Related News