கொலை வழக்கு விசாரணையில் தப்பிக்க உச்சநீதிமன்றத்தில் பொய் சொன்ன பீகார் துணை முதல்வர்: பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
பாட்னா: பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்,\\” 1995ம் ஆண்டு முங்கர் மாவட்டத்தில் சொந்த ஊாரான தாராபூரில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி உச்சநீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டார். இந்த படுகொலை சம்பவம் நடந்தபோது தனக்கு 14 வயது மைனர் என்று கூறி மனு செய்தார். இதனால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் 2020ம் ஆண்டு பிரமாணப்பத்திரத்தை பார்த்தால் தனக்கு 51வயது என்று கூறி இருக்கிறார்.அதனை கணக்கில் எடுத்துக்கொண்டால் 1995ம் ஆண்டில் அவருக்கு 20 வயது இருக்கும். இந்த உண்மைகள் அவர்மீது வழக்கு தொடரப்படுவதற்கு வழிவகுக்கும் ” என்றார்.
Advertisement
Advertisement