தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெங்களூருவில் ரவுடி கொடூர கொலை: பாஜக எம்எல்ஏ மீது கொலை வழக்கு

Advertisement

பெங்களூரு: பெங்களூருவில் ரவுடி கொடூர கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த கித்தகனூர் பகுதியை சேர்ந்த சிங்கரெட்டி என்பவருக்குச் சொந்தமான நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த ரவுடி சிவபிரகாஷ் (40) என்பவர் பொது அதிகார பத்திரம் மூலம் மிரட்டி வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு, அந்த நிலத்தை காலி செய்யுமாறு சிவபிரகாசுக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெங்களூரு காவல் ஆணையரிடம் சிவபிரகாஷ் எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் அளித்திருந்தார்.

அதில், கிருஷ்ணராஜபுரம் தொகுதி பாஜக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பைரதி பசவராஜ், அவரது உதவியாளர் மற்றும் உறவினர் ஆகியோர் தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாகவும், சந்தை மதிப்பை விட மிகக் குறைந்த விலைக்கு சொத்தை விற்குமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது நிலத்தை பயன்படுத்த முடியாதபடி தன் மீது பொய் வழக்குகள் போட்டு சட்டரீதியான சிக்கல்களை உருவாக்க முயற்சிப்பதாகவும், சொத்துக்களை ஒப்படைக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்ததாக சிவபிரகாஷ் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று தனது வீட்டின் அருகே உள்ள ஹலசூரு ஏரிப் பகுதியில் சிவபிரகாஷ் நின்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்மக் கும்பல் ஒன்று, அவரை கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சிவபிரகாஷ் உயிரிழந்தார். இந்த கொலைச் சம்பவம் குறித்து சிவபிரகாஷின் தாயார் விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் பைரதி பசவராஜ் இந்த கொலையைத் தூண்டியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவபிரகாஷ் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பெங்களூரு கிழக்கு சரக இணை காவல் ஆணையர் ரமேஷ் பனோத் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக விமல் உட்பட ஐந்து பேரை பாரதிநகர் போலீசார் கைது செய்து, புலிகேசிநகர் துணைப் பிரிவு காவல்துறையினருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News