கொலையான வங்கதேச எம்பியின் ‘சதை’ செப்டிக் டேங்கில் மீட்பு: கொல்கத்தா போலீஸ் விசாரணை
Advertisement
இதுகுறித்து கொல்கத்தா போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வங்கதேச எம்பி அன்வருல் அசிம் அனாரை, அவரது அமெரிக்க குடியுரிமை பெற்ற வங்கதேச தொழிலதிபர் முகமது அக்தர் உஸ்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர். அன்வருல் அசிமின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டதால், பல இடங்களில் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வடக்கு 24 பர்கானாஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் செப்டிக் டேங்கில் அன்வருல் அசிமின் தோலுரிக்கப்பட்டு வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கடைத்துள்ளன. அவற்றை கைப்பற்றி தடயவியல் பகுப்பாய்வு மற்றும் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி உள்ளோம். இவ்வழக்கில் இதுவரை பெண் உட்பட 3 பேரை கைது செய்துள்ளோம்’ என்றனர்.
Advertisement