நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.250 கோடி முறைகேடு என ED கடிதம் எழுதியது தொடர்பாக மனு: ஐகோர்ட் கிளை கேள்வி
மதுரை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.250 கோடி முறைகேடு என ED கடிதம் எழுதியது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு. மதுரை கள்ளிக்குடியைச் சேர்ந்த ஆதிநாரயணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் ஐகோர்ட் கிளை இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கின் மனுதாரர் சரித்திர பதிவேடு குற்றவாளி; அவர் மீது 27 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை அனுப்பிய ரகசிய கடிதம் மனுதாரருக்கு எப்படி கிடைத்தது என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பினர். அமலாக்கத்துறை கடிதம் யார் யாருக்கு அனுப்பியது; யாருடைய கையெழுத்தும் இல்லையே? என நீதிபதிகள் கேள்வி. இந்த வழக்கின் விசாரணையை ஏற்கனவே உள்ள மனுவோடு விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டுக்கு மாற்றி ஐகோர்ட் கிளை அணையிட்டுள்ளது.
Advertisement
Advertisement