188 பேர் உயிரிழந்த 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்தது ஐகோர்ட்!!
Advertisement
அதில் 5 பேருக்கு மரண தண்டனையும், மீதமுள்ள 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் அணில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தானி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, இன்று வழங்கிய தீர்ப்பில், "'நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல. ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை. எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்து, 12 பேரையும் விடுதலை செய்கிறோம், "இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
Advertisement