தொடர்ந்து 6 நாட்களாக அதிகரித்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் பெரும் சரிவுடன் நிறைவு
மும்பை :தொடர்ந்து 6 நாட்களாக அதிகரித்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் பெரும் சரிவுடன் நிறைவடைந்தது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.85% சரிந்து நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 694 புள்ளிகள் சரிந்து 81,307 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 214 புள்ளிகள் சரிந்து 24,870 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது.
Advertisement
Advertisement