மும்பையில் இருந்து டெல்லி சென்ற இன்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அச்சம்
புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து டெல்லிக்கு இன்டிகோ நிறுவன பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டு சென்றது. இதில் 200 பயணிகள் மற்றும் விமானிகள், பணிப்பெண்கள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமான கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
Advertisement
இதையடுத்து டெல்லி விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினர், மோப்ப நாய் குழுவினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement