மும்பையில் இருந்து பெங்களூருக்கு செரலாக் பாக்கெட்டில் ரூ.6 கோடி மதிப்பு போதைப்பொருள் கடத்தல்: நைஜிரியர் கைது
உடனடியாக நேற்று காலை அந்த வீட்டை சுற்றி வளைத்தபோது, வீட்டில் குழந்தைகளுக்கு உணவாக பயன்படுத்தும் செரலாக் பாக்கெட்டுகளில் போதை பொருட்கள் அடுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். வீட்டில் இருந்தவரை கைது செய்து விசாரித்தபோது நைஜீரியாவை சேர்ந்த சுக்குதீன் என்று தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, மும்பையில் இருந்து பெங்களூருக்கு போதை பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் சுக்குதீன் வசித்து வரும் வீட்டின் மாடியில் 4 கிலோ மதிப்பிலான எம்.டி.எம். கிரிஸ்டல் என்ற போதை பொருள் உளர வைத்திருப்பதும் தெரியவந்தது. அதனுடன் வீட்டில் இருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ.6 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.அவரை கைது செய்துள்ள போலீசார், தேசிய போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.