மும்பை தாக்குதலுக்கு பிறகும் பாக்.கிற்கு எதிராக காங். நடவடிக்கை எடுக்கவில்லை: பாஜ குற்றச்சாட்டு
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவரான சாம் பித்ரோடா வெளியிட்ட அறிக்கையில்,அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு ஒரு முறை பாகிஸ்தானுக்கு சென்றிருந்த போது சொந்த ஊரில் தங்கியிருந்த உணர்வு ஏற்பட்டது என்று கூறியிருந்தார்.
Advertisement
இந்த நிலையில், பாஜ செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான தலைவரான சாம் பித்ரோடா பாகிஸ்தானில் இருந்ததை சொந்த நாட்டில் இருப்பது போன்று இருந்ததாக தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகும் அந்த நாட்டின் மீது காங்கிரஸ் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியமளிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு விருப்பமான தேர்வு காங்கிரஸ் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
Advertisement