மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 746 புள்ளிகள் உயர்வு..!!
மும்பை: வெள்ளிக்கிழமை பெரும் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் இன்று சரிவில் இருந்து மீண்டு 0.93% வரை உயர்ந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 746 புள்ளிகள் உயர்ந்து 80,604 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 222 புள்ளிகள் அதிகரித்து 24,585 புள்ளிகளில் நிறைவடைந்தன. தேசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகமான 3,096 நிறுவன பங்குகளில் 1,606 பங்குகளின் விலை உயர்ந்தன. 1,414 நிறுவன பங்குகள் விலை குறைந்து வர்த்தகமான நிலையில் 76 நிறுவன பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தன.