அமீர் கான் பற்றிய சுவாரசிய தகவல்.. 4 அடுக்குமாடி குடியிருப்புக்கு மாதம் ரூ.24 லட்சம் வாடகை: என்ன ஸ்பெஷல்?
மும்பை: பாலிவுட் நடிகர் அமீர் கான் மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.24 லட்சம் மாதம் வாடகைக்கு எடுத்துள்ளார். ஷாருக்கான் வீட்டின் அருகில் உள்ள இந்த குடியிருப்பின் அமீர் கான் விரைவில் குடியேறவுள்ளார். பாலிவுட்டில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர் அமீர் கான் இவர் இந்தியன், லகான், கஜினி, தங்கல் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை கொடுத்ததோடு, நல்ல கதையம்சம் உள்ள படங்களை தந்து இருக்கிறார். வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ள ரஜினிகாந்த் கூலி திரைப்படத்திலும் அமீர் கான் நடித்துள்ளார்.
தற்போது அமீர் கான் பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகி பாலிவுட்டில் பேசுபொருளாகி உள்ளது. மும்பையில் உள்ள பாந்த்ராவில் பிரமாண்ட குடியிருப்பில் அமீர் கான் வசித்து வருகிறார். இதில் 12 குடியிருப்புகளை வாங்கி அதில் தங்கி வருகிறார். இந்த மொத்த அடுக்குமாடி குடியிருப்பும் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மிகவும் சொகுசாகவும், வீட்டிற்க்குள் இருந்த படி கடலின் அழகை பார்க்கும் வகையிலும் இந்த குடியிருப்புகள் மாற்றியமைக்கப்பட உள்ளன. இப்படி மாற்றப்பட்டால் இதன் மதிப்பு 1 சதுர அடி ஒரு லட்ச ரூபாய்க்கும், ஒரு அடுக்குமாடி 100 கோடி ரூபாய் அளவுக்கும் உயரும்.
இதற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதால், மும்பையில் உள்ள நர்கிஸ்தன் சாலையில் உள்ள பிளாட் ஒன்றுக்கு அமீர் கான் செல்ல உள்ளார். அங்கு நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை அடுத்த ஐந்து ஆண்டிற்கு அமீர் கான் வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த 4 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ 24.5 லட்சம் மாதம் வாடகை தரவுள்ளார். இதற்கு டெபாசிட் தொகையாக மட்டுமே 1.46 கோடியை அமீர் கான் செலுத்தியுள்ளார். அமீர் கான் தற்போது வாடகைக்கு எடுத்துள்ள குடியிருப்பின் அருகே தான் நடிகர் ஷாருக்கான் வீடு உள்ளது. தான் புதிதாக வாடகைக்கு எடுத்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமீர் கான் விரைவில் குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.