தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்பையில் 11 மணிநேரத்தில் 20 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது: கனமழை, பெரு வெள்ளம் காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்து உள்ளனர். கனமழை தொடர்வதால் மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மும்பை, தானே, ராய்கட், ரத்னகிரி, சிந்து, நாண்டேட் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மும்பையில் 11 மணிநேரத்தில் 20 செ. மீ மழை கொட்டி தீர்த்தத்தால் பல்வேறு சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாண்டேட் மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 30 செ. மீ மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாத்துங்கா, பத்ரா கிழக்கு விரைவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில், பல அடி உயரத்துக்கு ஓடும் தண்ணீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகளில், ஆறு போல் ஓடும் தண்ணீரில் இளைஞர்கள் நீச்சலடிக்கும் காட்சிகளும் அரங்கேறின. சில இடங்களில் ரயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தானேவிலிருந்து மும்பை செல்லும் புறநகர் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.

இதனால் கடைசியாக இயக்கப்பட்ட ரயிலில் பெண்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறிய நிலையில், சிலர் தண்டவாளத்தில் நடந்து சென்றனர். மிதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக நாண்டேட் பகுதியில் உள்ள அம்பேத்கார் நகரில் வீடுகள் மற்றும் பொருட்கள் அடித்து செல்லப்பட்டதால் அங்கு வசிப்பவர்கள் செய்வதறியாது தவித்தனர். தானே மாவட்டத்தில் கல்வ நல்வாடா கோபு கிழக்கு பகுதிகளிலும் கனமழையால் சாலைகள், குடியிருப்புகள் மூழ்கியது. தானே பல்கர் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்து குடியிருப்புகளிருந்து 200க்கு மேற்பட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே கனமழை பெருவெள்ளம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, ராய்கட், ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்து 48 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் என்று இந்தியா வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Advertisement