முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் தலைமையில் கண்காணிப்பு துணை குழு ஆய்வு
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் மழை பெய்து 142 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் உயரும் போது ஸட்டர்கள் திறக்கப்பட்டு கேரள பகுதிகளில் உபரிநீர் வெளியேற்றப்படுவது வழக்கம். அதனால் ஸட்டர்கள் முறையாக இயங்குகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதேபோல் முல்லை பெரியாறு அணையில் நீர்க்கசிவு குறித்தும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர். இதனை தொடர்ந்து தமிழக - கேரள அதிகாரிகளிடம் அணையின் மராமத்து பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். மேலும் முல்லைபெரியாறு கண்காணிப்பு அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் தமிழக - கேரள அதிகாரிகளிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று கண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பவுள்ளனர்.