ரூ.28 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக முகேஷ் அம்பானியின் குடும்பம் முதலிடம்!!
மும்பை : ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் குடும்பம் ரூ.28 லட்சம் கோடி மதிப்பு சொத்துகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஹுருன் மற்றும் பார்கிளேஸ் இணைந்து வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இந்தியாவின் முதல் 300 பணக்கார குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.140 லட்சம் கோடி என கூறப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் குடும்பம் ரூ.28 லட்சம் கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது. அம்பானி குடும்பத்தின் சொத்து மட்டும் நாட்டின் ஜிடிபி 12% பங்களிக்கிறது.
அதானி குடும்பத்தின் ரூ.14 லட்சம் கோடி சொத்து மதிப்பை விட 2 மடங்கு அதிகமாகும். ரூ.6.47 லட்சம் கோடி சொத்துகளுடன் பிர்லா குடும்பம் 2வது இடத்திலும் ரூ.5.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஜுண்டால் குடும்பம் 3வது இடத்திலும் உள்ளன. 4வது இடத்தில் பஜாஜ் குடும்பம், 5வது இடத்தில் மகேந்திர குடும்பம், 6வது எச்சிஎல் நாடார் குடும்பம், 7வது இடத்தில் முருகப்பா குடும்பம், 8வது விப்ரோவின் பிரேம்ஜி குடும்பமும் 9வது இடத்தில் அணில் அகர்வால் குடும்பமும் உள்ளன. முதல் தலைமுறை தொழில் முனைவோர்களால் உருவாக்கப்பட்ட குடும்ப நிறுவனங்களில் அதானி குடும்பம் முதலிடத்தில் உள்ளது.