தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் வறட்சியால் பசுந்தீவனத்தை தேடி அலையும் வன விலங்குகள்

Advertisement

ஊட்டி : முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், யானை உட்பட பல்வேறு விலங்குகளும் பசுமையை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வட கிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம்.

இவ்விரு பருவமழையும் குறித்த சமயத்தில் பெய்ததால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளித்தது.

ஆனால், கடந்த நவம்பர் மாதம் முதல் மழை குறைந்து பனி பொழிவு அதிகரித்தது. இதனால், வனங்களில் பசுமை என்பதே இல்லாமல் போய்விட்டது. புற்கள், செடி கொடிகள் காய்ந்து போயுள்ளன. மரங்களில் கூட இலைகள் காய்ந்து காணப்படுகிறது.

தற்போது வனங்கள் காய்ந்துள்ள நிலையில், காட்டு தீ ஏற்டும் அபாயம் நீடிக்கிறது. மேலும், முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாகவே ஊட்டி தேசிய மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்லும் நிலையில், ஏராளமான வாகனஙகள் இவ்வழித்தடம் வழியாக சென்று வருகின்றன.

அதேபோல, மசினகுடி முதல் முதுமலை வரையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. இதனால், இச்சாலையோரங்களில் கவுன்டர் பயர் மூலம் வனங்களில் காட்டு தீ ஏற்படாமல் பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் உள்ள புற்கள், செடி கொடிகள் காய்ந்த நிலையில், பசுமையின்றி பழுப்பு நிறத்தில் வனங்கள் காட்சியளிக்கிறது. மேலும், நீர் நிலைகளிலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

இதனால், இங்குள்ள காட்டு யானைகளுக்கு போதிய பசுந்தீவனங்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றன.

யானைகள் உட்பட பெரும்பாலான வன விலங்குகள் பசுமையை தேடி, நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு இடம் பெயர துவங்கியுள்ளன.

Advertisement

Related News