முதுமலையில் ஆண் யானை உயிரிழப்பு: தந்தங்கள் கடத்தல்
10:42 AM Aug 06, 2025 IST
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பொக்காபுரம் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழந்தது. தந்தங்கள் மாயமான நிலையில், யானை வேட்டையாடப்பட்டு தந்தங்கள் கடத்தப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது. யானை இறப்பு, தந்தங்கள் கடத்தல் குறித்து முதுமலை புலிகள் காப்பக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்.