பொதுமக்களின் பேருந்து பயன்பாட்டை மேம்படுத்த மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வாட்ஸ்-அப், சாட்பாட் செயலி வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதனை மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். இந்தப் புதிய வசதியை 94450 33364 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதில்” Hi” என குறுஞ்செய்தி அனுப்பியவுடன், விசாரணை, புகார், தவறவிட்ட பொருட்கள், புகாரின் நிலை, கருத்து மற்றும் பரிந்துரை ஆகியவை திரையில் தெரியும். இதில் வேண்டியவற்றை தேர்வு செய்து, உரையாடலை தொடரலாம். இதில் பணியாளர், பேருந்து சேவை உள்ளிட்டவை தொடர்பாகவும் புகாரை பதிவு செய்ய முடியும். அதன்பின்னர் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.