மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.சுந்தர் பொறுப்பேற்பு
Advertisement
புதுடெல்லி: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தர் நேற்று பதவி ஏற்று கொண்டார். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கெம்பையா சோமசேகர் ஓய்வு பெறுவதையொட்டி, அந்த பதவியிடத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் பரிந்துரைக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை கடந்த 12ம் தேதி உச்ச நீதிமன்ற கொலிஜீயம் வௌியிட்டது.
இந்நிலையில் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த கெம்பையா சோமசேகர் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து எம்.சுந்தர் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
Advertisement