ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் கைது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பிக்கு இரண்டு நாள் போலீஸ் காவல்
Advertisement
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரை சிபிசிஐடி போலீசார், கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியில் கடந்த 2ம் தேதி கைது செய்தனர். மேலும் தோட்டக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நிலமோசடி வழக்கு சம்பந்தமாக சேகரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக ஒரு வாரம் போலீஸ் கஸ்டடி கேட்டு சிபிசிஐடி போலீசார் நேற்றுமுன்தினம் கரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் மனு செய்தனர். இந்த மனுவை நேற்று மாலை விசாரித்த நீதிபதி பரத்குமார், சேகரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
Advertisement