எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கு விபரங்கள் என்ன? மாநில தகவல் ஆணையர் 12 வாரத்தில் பதில்தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Advertisement
அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நிலை குறித்த விவரங்களை வழங்குமாறு கோரியிருந்தேன். எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தும் தகவல்கள் வழங்கப்படவில்லை. பொது மக்கள் நலன் கருதி கேட்கப்பட்ட தகவல்களை தர மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். எனவே, தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்க வேண்டுமென்று மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.மாலா, மேல்முறையீடு மீது 12 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Advertisement