எம்பி, எம்.எல்.ஏக்கள் கிரிமினல் வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு: உச்ச நீதிமன்றம் உறுதி
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்,கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று ஒரு அவசர முறையீடு முன்வைக்கப்பட்டது. அதில், ‘‘நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40சதவீதம் பேருக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் நிலவையில் உள்ளது. இவை அனைத்தையும் விரைந்து விசாரிக்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Advertisement
குறிப்பாக இதுதொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முறையீட்டை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,” இதுகுறித்து விரைந்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
Advertisement