மோவ்: மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகின்றது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த மருத்துவமனையில் கழிவறைப்பகுதியில் இருந்து நாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் உடலை கவ்விச்சென்றுள்ளது. இதனை பார்த்த மருத்துவமனை ஊழியர் நாயை விரட்டி குழந்தையின் சடலத்தை மீட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வெள்ளியன்று இரவு ஒன்பது மணிக்கு வயிற்று வலி என்று கூறி வந்த 17வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் சிறுமி கழிவறைக்கு செல்வது பதிவாகி உள்ளது. சிறிது நேரத்திலேயே சிறுமி அடையாளம் தெரியாத ஆண் நபருடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் சிறுமி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்து இருக்கலாம் என்று மருத்துவமனை மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.