ம.பி. இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது..!!
மத்திய பிரதேசம்: மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறுகின்ற 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தூரில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டிக்கு 2 நாட்கள் முன்னதாக ஓட்டலில் இருந்து கஃபே-க்கு வீராங்கனைகள் நடந்து சென்றபோது பைக்கில் வந்த ஒருவர் பாலியல் தொல்லை செய்துள்ளார். இந்த நிலையில், கிரிக்கெட் வீராங்கனைகள் பைக்கில் பின்தொடர்ந்து வந்த நபர் தவறாக நடந்து கொண்டதாக ஆஸ்திரேலிய மகளிர் அணி நிர்வாகிகள் புகார் அளித்தனர். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனையிடம் தவறாக நடந்த அகீல்கான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.