சீமான் மீது வழக்குப்பதிய மாதர் சம்மேளனம் எஸ்பியிடம் மனு
Advertisement
விருதுநகர்: விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்டச் செயலாளர் பாண்டிச்செல்வி தலைமையில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘‘நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பெண்களையும், பெண்கள் அமைப்புகளையும் தொடர்ச்சியாக இழிவுபடுத்தி கேவலமாக பேசி வருகிறார்.
சமீபத்தில் ரிதன்யா தற்கொலை வழக்கிலும் நாகரிகமற்ற முறையில் பேசி உள்ளார். சீமான் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
Advertisement