நீதிமன்ற கட்டிட 3வது மாடியில் இருந்து 2 பெண் குழந்தைகளை வீசி தாய் தற்கொலை: கணவரும் குதித்ததால் பரபரப்பு
Advertisement
பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். முன்னதாக நவீன் மீதான வழக்கு விசாரணையின் போது, அவரது பைக் மற்றும் செல்போன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நவீன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பைக் மற்றும் செல்போனை மீட்க மேடக் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, தம்பதி இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ரம்யா நீதிமன்ற கட்டிடத்தின் 3வது மாடிக்கு சென்று தனது 2 குழந்தைகளை கீழே வீசிக்கொன்று தள்ளிவிட்டு, அவரும் குதித்தார். இதனை பார்த்த நவீனும் 3வது மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரம்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நவீன் மற்றும் 2 குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Advertisement