தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெந்நீரில் குழந்தையை போட்ட தாய்.. துடிதுடித்து இறந்த பிஞ்சு; கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி!!

பெங்களூரு: கர்நாடகாவில் பால் குடிக்க மறுத்த பச்சிளம் குழந்தையை வெந்நீரில் போட்டு கொலை செய்யத தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்துக்கு பின்னான பெண்களின் உடல், மனம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் எந்த மாதிரியான விளைவுகளும் ஏற்படுத்தலாம். போஸ்ட்பார்டம் டிப்ரஷன் அதாவது பிரசவத்துக்கு பின்னான மன சோர்வு அல்லது அழுத்தம் என இதை வகைப்படுத்தும் மருத்துவர்கள் இதனை தீவிரமாக கண்காணித்து சிகிச்சையளிக்கும் தேவையை தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கும் அளவுக்கு வெளிக்காயமாகவோ பெரும் தாக்கம் நிறைந்த அறிகுறிகளுடன் கூடிய நோயாகவோ இல்லாமல் மனம் சார்ந்து இது பலமாற்றங்களை ஏற்படுத்துவதால் பிரசவத்தின் பெண் படும்பாடு சொல்லி மாளாது. முறையாக சிகிச்சை அளிக்காத பட்சத்தில் தான் பெற்ற குழந்தையையே தாய் கொலைசெய்யும் அளவுக்கு இதன் தாக்கம் நீளும். அத்தனை தீவிரமானது பிரசவத்துக்கு பின்னான அழுத்தம் என்பது. இப்படி மனம் அழுத்தத்தால் பெற்ற பிஞ்சிகளை கொன்று வீசிய தாய் கொடூர செயல் என பல செய்திகள் கேட்டுயிருப்போம். கடந்த ஜூன் 12ல் சென்னை அடுத்த நீலாங்கரை பகுதியில் பிறந்த 45நாட்களான இரட்டை குழந்தை ஒன்றை தாய் மாடியில் இருந்து தூக்கி போட்ட கொன்றது. கேரளாவில் 23 பெண் ஒருவர் தனது குழந்தையை மூச்சுத் திணறடித்து கொலை செய்தது என கடந்து போக முடியாத எண்ணிலடங்கா சம்பவங்களை மாதம் ஒருமுறையாவது கேட்டு இருப்போம்.

அந்த வரிசையில் தற்போது கர்நாடக கேசும் இணைந்து உள்ளது. பெங்களூர் அருகில் உள்ள நலமங்களா என்ற பகுதியை சார்ந்த ராதா என்ற பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிறந்து 38 நாட்களே ஆனா தனது ஆண் குழந்தையை கொதிக்கும் வெந்நீரில் போட்டு கொலை செய்து உள்ளர். ராதாவுக்கு குறை பிரசவதில் குழந்தை பிறந்த நிலையில் அவர் சில நாட்களாக தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. ராதாவின் கணவர் மதுக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், ராதா விஸ்வேஷ்புராவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று இரவு ராதாவின் குழந்தை அழத் தொடங்கியுள்ளது.

பால்குடுதலும் குடிக்காமல் அழுத்த குழந்தையை ஒரு பாத்திரத்தில் வெந்நீரை காயவைத்து அதில் துக்கி வைத்துள்ளார். இதில் தீக்காயம் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றன. பிரசவத்துக்கு பிறகான மனம் அழுதால் ராதா பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகதிக்கும் காவல்துறையினர், அதனால் அவர் இப்படி செய்து இருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்நிலையில், ராதா செய்தது கொடூர செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இவற்றை எல்லாம் தாண்டி முறையான சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை மட்டுமே இவர்களை இதுபோன்ற அழுத்தத்தில் இருந்து மீட்டு கொண்டுவரும் என்பது நிதர்சனமான உண்மை.