இதைவிட கூட்டம் அஜித்துக்கு வரும்: ராஜேந்திர பாலாஜி ‘பளீச்’
Advertisement
சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்றால் அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், இந்த தேர்தலோடு விஜய்யை திமுக முடித்து விடும். விஜய்க்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இதுவரை உருவாகவில்லை. விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறுவது இந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் நடைபெறாத ஆசை. அவர் முயற்சி எல்லாம் வீணாகும். விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. விஜய்க்கு கூடும் கூட்டத்தை விட அஜித் வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் கூடும். ஏர்போர்ட்டில் வந்து ரஜினி நின்றால் 5 லட்சம் பேர் கூடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement