மோதிய மோன்தா!
தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும் அளவிற்கு பயமுறுத்தியது மோன்தா புயல். மேலும் அதிவேக காற்று, மழை என பயமுறுத்தியது இந்தப் புயல். இந்த பெயர் தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்டது. தாய்லாந்து மொழியில் மோன்தா என்பது ஒரு பெண் பெயர், இதன் அர்த்தம் “மணமிக்க மலர்” அல்லது “அழகான பூ” என பொருள் பெறுகிறது. தாய்லாந்தில் இந்த பெயர் மென்மை, அழகு மற்றும் இயற்கையின் மணத்தை குறிக்கும் நற்பெயராகப் பயன்படுகிறது. எனவே, தாய்லாந்து வழங்கிய பெயர் இயற்கையின் அழகையும், மழையின் நறுமணத்தையும் பிரதிபலிக்கிறது என்று கூறப்படுகிறது. சென்ற வாரம் முழுக்க தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைகளில் கடந்த இந்த புயல் இரு மாநில வானிலை ஆய்வாளர்கள் மட்டுமின்றி பொது மக்களையும் பயமுறுத்தியது. மேலும் இவை சார்ந்த செய்திகள், வீடியோக்கள், குறும்புக்கார இணையதள வாசிகளின் மீம்ஸ் என எங்கும் இந்த“மோன்தா” புயல் தான் கிட்டத்தட்ட “மோனிகா” டிரண்டையே கூட முடித்து வைத்தது. இதற்கிடையில் பள்ளி , கல்லூரிகள் விடுமுறை, பல ரயில்கள் ரத்து அதனால் போடப்பட்ட செய்திகள், ஸ்டேட்டஸ்கள் என புயல் பறந்தது.